< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடியின் பயணம் குறித்த நிகழ்ச்சி நிரலில் பாரத் என்ற பெயர்.!
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் பயணம் குறித்த நிகழ்ச்சி நிரலில் "பாரத்" என்ற பெயர்.!

தினத்தந்தி
|
5 Sept 2023 11:58 PM IST

பிரதமர் மோடியின் இந்தோனேஷிய பயணம் குறித்த நிகழ்ச்சி நிரலில் “பாரத்" பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' என மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பாரத் என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்பட வேண்டும் என சில தரப்பினர் ஆதரவும், இந்தியா என்ற பெயரே தொடர வேண்டும் என ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், பிரதமர் மோடி நாளை இந்தோனேஷியா புறப்படும் நிலையில், நிகழ்ச்சி நிரலில் பாரத் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, "பாரத பிரதமரின் இந்தோனேஷிய பயண நிகழ்ச்சி" என்ற பெயரில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

ஜி20 அழைப்பிதழில் பாரத குடியரசுத்தலைவர் என பெயர் மாற்றப்பட்ட நிலையில், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்