< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்றத்திற்குள் இருவர் அத்துமீறி நுழைந்த விவகாரம் மிகவும் தீவிரமானது - மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்திற்குள் இருவர் அத்துமீறி நுழைந்த விவகாரம் மிகவும் தீவிரமானது - மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

தினத்தந்தி
|
16 Dec 2023 3:20 PM IST

உள்துறை மந்திரி அவையில் விளக்கம் அளிக்க வலியுறுத்தி வருகிறோம், ஆனால் அவர் அதை கண்டுக்கொள்ளவில்லை என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது,

நாடாளுமன்றத்தில் அத்துமீறி இருவர் நுழைந்த விவகாரம் மிகவும் தீவிரமானது, இதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.

இது குறித்து மத்திய உள்துறை மந்திரி அவையில் விளக்கம் அளிக்க நாங்கள் வலியுறுத்தி வருகிறோம், ஆனால் அவர் அதை கண்டுக்கொள்ளவில்லை.

இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, ஆனால் அதே சமயம் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேசுவதிலும் அர்த்தமில்லை. இந்த பாஜக அரசு, காங்கிரஸை குறை கூறுவதிலும், நேரு, காந்தி போன்ற தலைவர்களை அவமதித்து வாக்கு சேகரிப்பதிலும்தான் குறியாக உள்ளது. இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்