< Back
தேசிய செய்திகள்
அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கடவுள் ராமரின் படத்தை அதில் இடம்பெறச் செய்துள்ளனர் - ஜகதீப் தன்கர்
தேசிய செய்திகள்

'அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கடவுள் ராமரின் படத்தை அதில் இடம்பெறச் செய்துள்ளனர்' - ஜகதீப் தன்கர்

தினத்தந்தி
|
13 Jan 2024 8:57 PM IST

‘அடிப்படை உரிமைகள்’ என்ற அத்தியாயத்தின் மேல் கடவுள் ராமரின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது என ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

ஜெய்ப்பூர்,

'ராம ராஜ்ஜியம்' என்ற உணர்வு இந்திய அரசியலமைப்பில் பொதிந்துள்ளது என்றும், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், அடிப்படை உரிமைகள் தொடர்பான அத்தியாயத்தின் மேல் ராமர், லட்சுமணர் மற்றும் சீதையின் படத்தை இடம்பெறச் செய்துள்ளனர் என்றும் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது;-

"வரலாறு தெரியாத, அறியாத நபர்கள், ராமர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று கூறும்போது மிகுந்த வேதனை அடைகிறேன். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 'அடிப்படை உரிமைகள்' என்ற அத்தியாயத்தின் மேல் கடவுள் ராமர், லட்சுமணர் மற்றும் சீதையின் உருவப்படம் உள்ளது.

கடவுள் ராமரை அவமரியாதை செய்பவர்கள், உண்மையில் ராமரின் படங்களை அங்கு வைத்த நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களை அவமதிக்கிறார்கள். கடவுள் ராமர் மற்றும் ராம ராஜ்ஜியத்தின் ஆன்மா நமது இந்திய அரசியலமைப்பில் பொதிந்துள்ளது.

அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக இருந்தால்தான் சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும். தேச நலன் எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும்."

இவ்வாறு ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்