< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காங்கிரஸ் பாதயாத்திரை: தமிழகத்தில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர்
|2 Sept 2022 12:25 AM IST
காங்கிரஸ் பாதயாத்திரையில் பங்கேற்பவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.
புதுடெல்லி,
அகில இந்திய காங்கிரஸ் சார்பில் "பாரத் ஜோடோ யாத்ரா" என்கிற பாதயாத்திரை ராகுல்காந்தி தலைமையில் வருகிற 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு புறப்படுகிறது. இந்த யாத்திரையில் பங்கேற்பவர்களின் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் 117 பேர் இடம் பிடித்திருக்கிறார்கள். அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 15 பேர் இடம்பெற்று உள்ளனர். இதனையடுத்து மத்தியபிரதேசத்தில் 10 பேரும், ராஜஸ்தான் மற்றும் மராட்டிய மாநிலத்தில் தலா 9 பேரும், கேரளாவில் 8 பேரும், அரியானா, சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் தலா 7 பேரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
தமிழகத்தில் காயத்ரிராஜ் முரளி, முகமது ஆரிப் மற்றும் வக்கீல் ஆர்.சுதா ஆகிய 3 பேர் இடம் பெற்றுள்ளனர். புதுச்சேரியில் பெரியநாயகி என்பவர் இடம்பிடித்து இருக்கிறார்.