ஜனதாதளம்(எஸ்) கட்சி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; சென்னபட்டணாவில் குமாரசாமி, ராமநகரில் நிகில் போட்டி
|கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சென்னபட்டணாவில் குமாரசாமியும், அவரது மகன் நிகில் குமாரசாமி ராமநகரிலும் போட்டியிடுகிறார்கள்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தல்
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கு தயாராகும் பணிகளை ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. மூன்று கட்சிகளின் தலைவர்களும் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனதா தளம் (எஸ்) கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, பஞ்சரத்னா யாத்திரை என்ற பெயரில் கிராமங்கள்தோறும் சென்று மக்களை சந்தித்து ஆதரவை திரட்டி வருகிறார். இந்த யாத்திரை தொடக்க நாளிலேயே முதல் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதாக குமாரசாமி கூறி இருந்தார். ஆனால் சில காரணங்களால் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பது ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.
அதில் 224 தொகுதிகளில் 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1. கானாப்புரா-நசீர் பாபுல்சாப் பகவான், 2. பைலஹொங்கலா-சங்கர் மாடலகி, 3. பாதாமி-ஹனுமந்தப்பா மாவினமர, 4. முத்தோபிகால்-சன்னபசப்பா சங்கப்பா, 5. தேவரஹிப்பரகி-ராஜூகவுடா பட்டீல், 6. பசவனபாகேவாடி-பரமானந்த பசப்பா, 7. பபலேஸ்வர்-பசவராஜ் ஹொனவாட, 8. நாகடானா-தேவானந்த், 9. இண்டி-பி.டி.பட்டீல், 10. சிந்தகி-சிவானந்த் பட்டீல்,
11.அப்சல்புரா-சிவக்குமார் நாடேகர், 12. சேடம்-பால்ராஜ் குத்தேதார், 13. சிஞ்சோலி-சஞ்சீவ் யாகாபுரா. 14. ஆலந்தா-மகேஸ்வரி வாலே, 15. குருமித்கல்-நாகனகவுடா கந்தனூர், 16. உம்னாபாத்-சி.எம்.பயாஸ், 17. பீதர் தெற்கு-பண்டப்பா காசம்பூர், 18. பீதர்-ரமேஷ் பட்டீல், 19. பசவகல்யாண்-எஸ்.ஒய்.காத்ரி, 20. ராய்ச்சூர் புறநகர்-நரசிம்மநாயக், 21. மான்வி-ராஜவெங்கடப்பா நாயக், 22. தேவதுர்கா-கரியம்மா நாயக், 23. லிங்கசுகூர்-சித்து பன்டி, 24. சிந்தனூர்-வெங்கடராவ் நாடகவுடா.
பத்ராவதி- சாரதா அப்பாஜி கவுடா
25. குஸ்டகி-துக்காராம் சுர்வி, 26. கனககிரி-அசோக் உம்மலட்டி, 27. ஹாவேரி-துக்காராம் மாலகி, 28. ஹிரேகெரூர்-ஜெயானந்த் சாவண்ணனவர், 29. ராணிபென்னூர்-மஞ்சுநாத் கவுடர், 30. ஊவின ஹடகலி-புத்ரேஸ், 31. சண்டூர்-சோமண்ணா, 32. ெசல்லகெரே-ரமேஷ், 33. ஒசதுர்கா-திப்பேசாமி, 34. ஹரிஹரா-எச்.எஸ்.சிவசங்கர், 35. தாவணகெரே தெற்கு-அமானுல்லா, 36. ெசன்னகிரி-யோகேஷ், 37. ஒன்னாளி-சிவமூர்த்தி கவுடா, 38. சிவமொக்கா புறநகர்-சாரதா புர்யா நாயக், 39. பத்ராவதி-சாரதா அப்பாஜிகவுடா, 40. தீர்த்தஹள்ளி-ராஜாராம்,
41. சிருங்கேரி-சுதாகர் ஷெட்டி, 42. மூடிகெரே-பி.பி.நிங்கய்யா, 43. சிக்கமகளூரு-திம்மஷெட்டி, 44. சிக்கநாயக்கனஹள்ளி-சுரேஷ்பாபு, 45. துருவகெரே-கிருஷ்ணப்பா, 46. குனிகல்-நாகராஜய்யா, 47. துமகூரு நகர்-கோவிந்தராஜ், 48. துமகூரு புறநகர்-கவுரிசங்கர், 49. கொரட்டகெரே-சுதாகர் லால், 50. குப்பி-நாகராஜ், 51. பாவகடா-திம்மராயப்பா.
காந்திநகர்-ராஜாஜிநகர்
52. மதுகிரி-வீரபத்ரய்யா, 53. கவுரிபித்தனூர்-நரசிம்மமூர்த்தி, 54. பாகேபள்ளி-நாகராஜரெட்டி, 55. சிக்பள்ளாப்பூர்-பச்சேகவுடா, 56. சிட்லகட்டா-ரவிக்குமார், 57. சிந்தாமணி-கிருஷ்ணா ரெட்டி, 58. சீனிவாசப்பூர்-வெங்கடசிவா ரெட்டி, 59. முல்பாகல்-சம்ருத்தி மஞ்சுநாத், 60. கோலார் தங்கவயல்-ரமேஷ்பாபு, 61. பங்காருபேட்டை-மல்லேஸ் பாபு, 62. கோலார்-சி.எம்.ஆர்.ஸ்ரீநாத், 63. மாலூர்-ராமகேவுடா, 64. பேடராயனபுரா-வேணுகோபால், 65. தாசரஹள்ளி-மஞ்சுநாத், 66. ஹெப்பால்-மொகித் அல்தாப், 67. காந்திநகர்-நாராயணசாமி, 68. ராஜாஜிநகர்-கங்காதர் மூர்த்தி, 69. கோவிந்தராஜ்நகர்-ஆர்.பிரகாஷ், 70. பசவனகுடி-அரமனே சங்கர்,
71. பெங்களூரு தெற்கு-பிரபாகர்ரெட்டி, 72. ஆனேக்கல்-கே.பி.ராஜூ, 73. தேவனஹள்ளி-நிசர்கா நாராயணசாமி, 74.தொட்டபள்ளாபுரா- முனேகவுடா, 75. நெலமங்களா-சீனிவாஸ்மூர்த்தி. 76. மாகடி-மஞ்சுநாத், 77. ராமநகர்-நிகில் குமாரசாமி, 78. ெசன்னபட்டணா-குமாரசாமி, 79. மலவள்ளி-அன்னதாணி, 80. மத்தூர்-டி.சி.தம்மண்ணா, 81. மேல்கோட்டை-சி.எஸ்.புட்டராஜூ, 82. மண்டியா-எம்.சீனிவாஸ், 83. ஸ்ரீரங்கப்பட்டணா-ரவீந்திர ஸ்ரீகண்டய்யா, 84. நாகமங்களா-சுரேஷ்கவுடா, 85. கே.ஆர்.பேட்டை-எச்.டி.மஞ்சுநாத், 86. பிரியப்பட்டணா-மகாதேவ், 87. கே.ஆர்.நகர்-சா.ரா.மகேஷ், 88. உன்சூர்- ஹரீஷ் கவுடா, 89. சாமுண்டீஸ்வரி-ஜி.டி.தேவேகவுடா, 90. டி.நரசிபுரா-அஸ்வின்குமார், 91. வருணா-அபிஷேக், 92. கிருஷ்ணராஜா-மல்லேஸ், 93. ஹனூர்-மஞ்சுநாத்.
குமாரசாமி மகன் நிகில்
இந்த வேட்பாளர்களில் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி ராமநகரிலும், ஜி.டி.தேவேகவுடா மகன் ஹரீஷ் கவுடா உன்சூரிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. குமாரசாமி மகன் நிகில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதாவிடம் தோல்வியை தழுவினார் என்பது நினைவுகூரத்தக்கது.