< Back
தேசிய செய்திகள்
கர்நாடகம்-மராட்டிய எல்லை பிரச்சினையில் இருமாநில மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்க கூடாது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
தேசிய செய்திகள்

கர்நாடகம்-மராட்டிய எல்லை பிரச்சினையில் இருமாநில மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்க கூடாது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

தினத்தந்தி
|
7 Dec 2022 12:15 AM IST

கர்நாடகம்-மராட்டிய இடையேயான எல்லை பிரச்சினையில் இரு மாநில மக்களிடையே இருக்கும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க கூடாது என்று முதல்- மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மக்களிடையே நல்லிணக்கம்

கர்நாடகம்-மராடடியம் இடையேயான எல்லை பிரச்சினையில் கர்நாடகத்தின் நிலைப்பாடு பல ஆண்டுகளாக ஒரே மாதிரியாக தான் உள்ளது. சட்டசபை தேர்தல் வருவதால் நாங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை. எல்லை பிரச்சினையில் எங்களை பொறுத்தவரையில் கர்நாடகத்தின் நிலைப்பாடு எப்போதும் ஒன்று தான். மராட்டிய மாநிலம் தான் இந்த பிரச்சினையை அடிக்கடி எழுப்பி வருகிறது.

அந்த மாநிலம் இதுகுறித்து பிரச்சினை கிளப்பும்போது கர்நாடகம் தனது பதிலை கூறுகிறது. இரு மாநில மக்களிடையே நல்லிணக்கம் உள்ளது. இந்த நல்லிணக்கத்தை யாரும் சீர்குலைக்க கூடாது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் அரசியல் அமைப்பு ரீதியான எங்களின் நிலைப்பாட்டை அங்கு தெரிவிப்போம். இந்த வழக்கில் கர்நாடகம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

நாங்கள் விரும்பவில்லை

தேர்தல் நோக்கத்திற்காக இந்த பிரச்சினையை எழுப்ப நாங்கள் விரும்பில்லை. கர்நாடகத்தின் எல்லை, மக்களின் நலனை காக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அது மட்டுமின்றி கேரளா, தெலுங்கானா, மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் கன்னடர்களின் நலனை காக்கவும் நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்