< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புல்டோசரில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த மணமகன்..! மத்திய பிரதேசத்தில் சுவாரஸ்யம்
|24 Jun 2022 10:44 AM IST
பூக்களால் அலங்கரிக்கப்ட்ட புல்டோசரின் முன்புறம் இருந்து மணமகன் திருமண நிகழ்வுக்கு சென்றுள்ளார்
திருமண வரவேற்புக்கு குதிரை அல்லது ,காரில் தான் பொதுவாக செல்வார்கள். ஆனால் மத்திய பிரதேசத்தில் நடந்த திருமண விழாவில் மணமகன் வித்தியாசமாக புல்டோசரில் சென்றிருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம், பீடல் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜல்லார் கிராமத்தை சேர்ந்தவர் அன்குஷ் ஜெய்ஷ்வால் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார் .இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வித்தியாசமான முறையில் தனது திருமணம் நடைபெற வேண்டும் என முடிவு செய்திருக்கிறார் .
அதன்படி, பூக்களால் அலங்கரிக்கப்ட்ட புல்டோசரின் முன்புறம் இருந்து அன்குஷ் ஜெய்ஷ்வால் திருமண நிகழ்வுக்கு சென்றுள்ளார் .இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.