மைசூருவில் நடந்த ஜி20 பிரதிநிதிகள் மாநாடு நிறைவு
|மைசூருவில் கடந்த 4 நாட்கள் நடந்த ஜி20 பிரதிநிதிகள் மாநாடு நிறைவடைந்தது. இறுதி நாளான நேற்று மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலை பார்வையிட்டனர்.
மைசூரு:-
ஜி20 மாநாடு கூட்டம்
ஜி20 நாடுகள் சபைக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தியா, உள்ளிட்ட 20 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்தநிலையில், ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த உச்சி மாநாட்டையொட்டி பல்வேறு மட்டத்திலான கூட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகிறது. பெங்களூருவில் நிதித்துறை தொடர்பான கூட்டமும், ஹம்பியில் கலாசார செயல் குழு கூட்டமும் நடந்தது.
பிரதிநிதிகள்
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஜி20 நாடுகளின் 3-வது கூட்டம் மைசூருவில் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. மைசூரு நகர் ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடந்தது. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற இந்த ஜி20 மாநாட்டில், இதில் 20 நாடுகளின் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். முதல்நாள் நட்சத்திர ஓட்டலில் நடந்த ஜி20 பிரதிநிதிகள் மாநாட்டில் அவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதையடுத்து 2 வது நாளான கடந்த 1-ந் தேதி அவர்கள் மைசூரு அரண்மனையை சுற்றி பார்த்தனர். அப்போது வெளிநாட்டு பிரதிநிதிகள் அங்கிருந்த கட்டிட கலைகளை பார்த்து வியப்பு அடைந்தனர்.
இதையடுத்து இந்த பிரதிநிதிகள் 3-வது நாளாக மண்டியாவை மாவட்டத்தில் உள்ள வரலாற்று புகழ் பெற்ற இடங்களை சுற்றி பார்த்தனர். அப்போது அவர்கள் 200 ஆண்டுகள் திப்பு சுல்தான் ஆட்சி செய்த இடமான ஸ்ரீரங்கப்பட்டணா சுற்றுலா தலங்களை நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கு திப்பு சுல்தான் போர் செய்து வீரமரணம் அடைந்த இடம். திப்பு சுல்தானின் சமாதி, ஆகிய இடங்களை பார்வையிட்டனர். மேலும் சில இடங்களில் கட்டிடக்கலையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
மாநாடு நிறைவு
இந்தநிலையில் இறுதி நாளான ஜி 20 மாநாடு நேற்றுடன் நிறைவு பெற்றது. பிரதிநிதிகள் அங்கிருந்து சொகுசு பஸ்களில் சாமுண்டி மலைக்கு சென்றனர். அங்கு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலை பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்து சிற்பங்கள் மற்றும் கோவில் வடிவமைப்புகள் குறை பார்த்து வியந்தனர். பின்னர் சாமுண்டி மலையையொட்டி இயற்கை அழகை ரசித்தனர். .இதற்கிடையில் வெளி நாட்டு பிரநிதிகளின் வருகையொட்டி சாமுண்டி மலைப்பகுதிக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் சாமுண்டி மலையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முன்னதாக சாமுண்டீஸ்வரில் அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளை மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத், மாநகராட்சி போலீஸ் கமிஷனர் ரமேஷ் பாத்தோடு, அரண்மனைநிர்வாக இயக்குனர் சுப்பிர மணியா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.