< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
|19 Aug 2023 12:15 AM IST
உடுப்பியில் விசைப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானார்.
உடுப்பி :-
உடுப்பி மாவட்டம் மல்பே பகுதியில் வசித்து வருபவர் கோபாலா ஷானிநார்(வயது 35). மீனவரான இவர் கடந்த 11-ந் தேதி மல்பே மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தனது சக மீனவர்களுடன் ஒரு விசைப்படகில் அரபிக்கடலில் மீன்பிடிக்க சென்றார்.
கடந்த 13-ந் தேதி அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கோபாலா கால் தவறி படகில் இருந்து கடலில் விழுந்தார். அதைப்பார்த்த அவரது சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் கோபாலாவை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அவர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கரை திரும்பிய மற்ற மீனவர்கள் இதுபற்றி மல்பே போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.