இன்ஸ்டாகிராமில் பழகிய நண்பரை தேடி ஓட்டலுக்கு சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி
|உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்ணிடம், வங்கியில் வேலை வாங்கி தருகிறேன் என கூறி பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரை சேர்ந்த இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நபர், வங்கியில் பணியாற்றுகிறேன் என தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
இந்த இளம்பெண்ணுக்கும் வங்கியில் வேலை வாங்கி தருகிறேன் என கூறி அவருக்கு உதவ முன்வந்துள்ளார். அவரும் இதனை நம்பியுள்ளார். இதன்பின் தன்னுடைய நண்பரை அனுப்பிய அந்த நபர், அவருடன் டேராடூன் நகருக்கு வரும்படி இளம்பெண்ணிடம் கேட்டு கொண்டார்.
அப்போதுதான் வேலை வாங்கி தரமுடியும் என கூறியிருக்கிறார். ஆனால், அந்த இளம்பெண்ணை டேராடூனில் அவர் சந்திக்கவில்லை. அதன்பின்பு, உத்தர பிரதேசத்தின் தனபவன் பகுதிக்கு செல்லும்படி அந்நபரின் கூட்டாளி இளம்பெண்ணிடம் கூறியிருக்கிறார்.
இதனை நம்பி அவரும் சென்றுள்ளார். இந்த முறை அந்த நபர் இளம்பெண்ணை சந்தித்திருக்கிறார். இதன்பின்பு, அந்த இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்து குளிர்பானம் ஒன்றை குடிக்க கொடுத்திருக்கின்றனர். அவரும் அதனை வாங்கி குடித்திருக்கிறார்.
இதன்பின்னர், அவரை ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து சென்ற அந்நபர் மற்றும் அவருடைய நண்பர் என இருவரும் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி அந்த பெண் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.