< Back
தேசிய செய்திகள்
ஏரியில் விழுந்து விவசாயி சாவு
தேசிய செய்திகள்

ஏரியில் விழுந்து விவசாயி சாவு

தினத்தந்தி
|
13 Aug 2022 9:00 PM IST

உப்பள்ளி அருகே ஏரியில் விழுந்து விவசாயி உயிரிழந்தார்.

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா பண்டிவாட் கிராமத்தை சேர்ந்தவர் மாருதி மகாதேவப்பா (வயது 58). விவசாயி. இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் விளைநிலம் உள்ளது. நேற்று அவர் தனது விளைநிலத்திற்கு சென்றார்.

பின்னர், விளைநிலத்திற்கு அருகில் உள்ள ஏரியில் கால் கழுவ சென்றார். அப்போது அவர் திடீரென கால் தவறி ஏரியில் விழுந்தார். இதில் அவர் நீரில் மூழ்கி பலியாகினார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக உப்பள்ளி புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர், அந்த பகுதியினர் உதவியுடன் ஏரியில் மூழ்கிய விவசாயியின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்