< Back
தேசிய செய்திகள்
திருமணமான மறுநாளே காதலியின் உல்லாச காட்சிகளை கணவருக்கு அனுப்பிய முன்னாள் காதலன்
தேசிய செய்திகள்

திருமணமான மறுநாளே காதலியின் உல்லாச காட்சிகளை கணவருக்கு அனுப்பிய முன்னாள் காதலன்

தினத்தந்தி
|
24 Feb 2024 4:20 AM IST

திருமணமான மறுநாளே காதலியுடன் இருந்தபோது எடுத்த உல்லாச காட்சிகளை அவருடைய கணவருக்கு முன்னாள் காதலன் அனுப்பினான்.

பெலகாவி,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கித்தூர் டவுன் நெசவாளர்கள் காலனியில் வசித்து வருபவர் முத்துராஜ்(வயது 24). இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளம்பெண்ணை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் தீவிரமாக காதலித்த நிலையில் தனிமையில் சந்தித்து உல்லாசமும் அனுபவித்ததாக கூறப்படுகிறது. அப்போது முத்துராஜ் தனது காதலியுடன் இருந்த உல்லாச காட்சிகளை தன்னுடைய செல்போனில் வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து வைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் முத்துராஜ், தனது காதலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதுபற்றி முத்துராஜிடம், அவரது காதலி கேட்டபோது அவர் சரியாக பதில் கூறாமல் மறுத்துள்ளார். இதனால் அவரது காதலி தனது பெற்றோர் கூறியபடி கானாப்பூர் தாலுகாவைச் சேர்ந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் நடந்த மறுநாள் அன்று முத்துராஜ், தனது காதலியை திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளையின் உறவினர்களை சந்தித்தார். அப்போது அவர் தான் தன்னுடைய காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்து வைத்திருந்த வீடியோக்களை அவர்களுக்கு காட்டியுள்ளார். மேலும் அவர்களுக்கு அந்த வீடியோக்களை வாட்ஸ்-அப் மூலம் பகிர்ந்துள்ளார்.

அதைப்பார்த்த மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து இதுபற்றி கேட்டு தகராறு செய்தனர். இதையடுத்து அந்த பெண், தனது கணவர் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அவர் நேராக தனது காதலன் வீட்டுக்கு சென்று இதுபற்றி நியாயம் கேட்டார். அப்போது முத்துராஜ், தனது காதலியையும், அவரது பெற்றோரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அவர்கள் தங்களது மகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாகவும், அதனால் நீதான் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினர். ஆனால் அதற்கு முத்துராஜ் மறுத்துவிட்டார்.

மேலும் வீட்டிற்குள் சென்று தாழிட்டுக் கொண்டார். இதனால் அவரது வீட்டின் முன்பு அவருடைய காதலியும், பெற்றோரும் விடிய, விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றி போலீசிலும் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்