< Back
தேசிய செய்திகள்
வேலைவாய்ப்பு முறையை பா.ஜ.க. அழித்துவிட்டது -  ராகுல்காந்தி விமர்சனம்
தேசிய செய்திகள்

வேலைவாய்ப்பு முறையை பா.ஜ.க. அழித்துவிட்டது - ராகுல்காந்தி விமர்சனம்

தினத்தந்தி
|
26 Sept 2024 5:20 PM IST

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை என ராகுல்காந்தி பேசினார்.

அரியானா,

அரியானாவில் வருகிற 5-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மாநிலத்தின் அஸ்ஸாந்த் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது;

'வேலைவாய்ப்பு முறையை பா.ஜ.க. அழித்துவிட்டது. நாட்டில் வேலைவாய்ப்பு முறையை பிரதமர் மோடி முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார். நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் என அனைத்தும் அதானியின் வசம் உள்ளன. ஆனால் சிறு, குறு வணிகர்கள், ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பை எதிர்கொள்கின்றனர்.

சில தொழிலதிபர்களுக்காக மோடி அரசு செயல்படுவதால் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைக்கவில்லை. பதிலாக, பணக்காரர்களின் 16 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசு அமைந்தால் இங்குள்ள ஒவ்வொருவருக்காகவும் செயல்படுவோம்" என்று பேசினார்.

மேலும் செய்திகள்