< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மதுபோதையில் தண்டவாளத்தில் லாரியை நிறுத்திய ஓட்டுநர்..!
|26 Nov 2023 1:31 AM IST
போலீசார் நடத்திய விசாரணையில், லாரியை ஓட்டிவந்த நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
அமிர்தசரஸ்,
பஞ்சாப் மாநிலம் லுதியானா பகுதியில் லாரியை ஓட்டிவந்த நபர் ஒருவர், திடீரென லாரியை ரெயில் தண்டவாளத்தில் நிறுத்திச்சென்றார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், உடனடியாக அவ்வழியாக வந்த ரெயிலுக்கு சிக்னல் கொடுத்தனர்.
இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட லோகோ பைலட், ரெயிலின் வேகத்தை குறைத்து விபத்தை தவிர்த்தார். அதனையடுத்து, தண்டவாளத்தில் இருந்து லாரி அப்புறப்படுத்த பின்னர் ரெயில் அங்கிருந்து சென்றது.
போலீசார் நடத்திய விசாரணையில், லாரியை ஓட்டிவந்த நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.