< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் வயிற்றில் கத்தரிகோலை வைத்து தைத்து அனுப்பிய மருத்துவர்கள்..!
|17 Aug 2023 4:36 PM IST
ஆந்திராவில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் வயிற்றில் கத்தரிகோலை வைத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏளூர்,
ஆந்திராவில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் வயிற்றில் கத்தரிகோலை வைத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏளூர் அரசு மருத்துவமனையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஏப்ரல் 19-ம் தேதி அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கடந்த 4 மாதங்களாக அவர் வயிற்றில் கத்தரிக்கோலுடன் அவதிப்பட்டு வந்துள்ளார். இறுதியாக மருத்துவமனைக்கு வந்து எக்ஸ்ரே செய்து பார்த்த போதுதான் உண்மை தெரிய வந்தது.
அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணை வெளியே யாருக்கும் தெரியாமல் விஜயவாடா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்குக் காரணமானவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.