< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருப்பதியில் செப்டம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் விபரங்களை வெளியிட்டது தேவஸ்தானம்
|1 Sept 2022 3:06 PM IST
திருப்பதி கோவிலில் செப்டம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் நடக்கும் விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1-ந்தேதி ரிஷி பஞ்சமி, 6 மற்றும் 21-ந்தேதி சர்வ ஏகாதசி, 7-ந்தேதி வாமன ஜெயந்தி, 9-ந்தேதி அனந்த பத்மநாப விரதம்,
11-ந்தேதி மகாளய பக்ஷம் ஆரம்பம், 13-ந்தேதி பிருஹத்யும விரதம் (உண்ட்ரால தத்தே),
20-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 25-ந்தேதி மஹாளய அமாவாசை,
26-ந்தேதி பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணம், 27-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.