< Back
தேசிய செய்திகள்
16 பேரை கடித்த தெரு நாய் உயிரிழப்பு... பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி !
தேசிய செய்திகள்

16 பேரை கடித்த தெரு நாய் உயிரிழப்பு... பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி !

தினத்தந்தி
|
9 July 2022 12:40 PM IST

கேரள மாநிலத்தில் உள்ள நிலம்பூர் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் சாலையில் சென்ற 16 பேரை தெருநாய் ஒன்று கடித்துள்ளது.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் சாலையில் சென்ற 16 பேரை தெருநாய் ஒன்று கடித்தது. இதையடுத்து அந்த நாய் உயிரிழந்தது.

இந்த நிலையில் நாய் உயிரிழந்ததை அடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனால், நாய் கடித்த 16 பேரையும் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்