< Back
தேசிய செய்திகள்
ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு..!
தேசிய செய்திகள்

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு..!

தினத்தந்தி
|
30 Sept 2023 8:08 AM IST

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக ரிசர்வ் வங்கி வழங்கிய காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

சென்னை,

நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் புதிதாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கிடையே ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், புழக்கத்தில் உள்ள நோட்டுகளை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்தது.

இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொண்டனர். இதற்காக வங்கிகள் சிறப்பு கவுண்ட்டர்களையும் திறந்திருந்தன. இந்த நிலையில் நாட்டில் புழக்கத்திலிருந்த 93 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக கடந்த 1-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்கிடையே ரிசர்வ் வங்கி வழங்கிய காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வழங்கினால் அவற்றை வாங்க வேண்டாம் என்று அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அவ்வாறு மீறி வாங்கினால் அதற்கு கண்டக்டர்களே முழு பொறுப்பாவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல், சினிமா தியேட்டர்கள், துணிக்கடைகள், ஷாப்பிங் மால்களிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை.

இன்றுடன் காலக்கெடு முடிவடைவதால், இன்னும் காலநீட்டிப்பு செய்யப்படுமா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.

மேலும் செய்திகள்