< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
|8 July 2022 9:04 PM IST
சிக்கமகளூருவில் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
சிக்கமகளூரு;
மத்திய அரசு சமையல் கியாஸ் விலையை ரூ.50 உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தாவணகெரேவில் உள்ள காந்தி சர்க்கிள் பகுதியில் மாவட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள், 'சமையல் கியாஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. சமையல் கியாஸ் விலையை உயர்த்தியதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்' என கோஷமிட்டனர்.
காங்கிரஸ் கட்சியை போல பா.ஜனதாவும் தற்போது மக்களை பழிவாங்கி வருகிறது என்றும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் குறைகள் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் கூறினர்.