< Back
தேசிய செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் நிமிட வாரியாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என ஆணையம் கூறியுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தேசிய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வுகள் நிமிட வாரியாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என ஆணையம் கூறியுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தினத்தந்தி
|
19 Oct 2022 3:38 PM IST

ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துவிட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தனக்கு இருக்கும் நெருக்கடியை மறைக்க முயல்கிறார் எடப்பாடி பழனிசாமி. சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு வழிவகுத்திருக்கிறார். வேண்டுமென்றே உண்ணாவிரதப்போராட்டம் நடத்துகிறார் பழனிசாமி.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பு என்பது பேரவையின் விதிகளில் இல்லாத ஒன்று. பேரவை விதிகள் 2 ஓ படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே விதியில் உள்ளது.

துப்பாக்கிச்சூடு நிகழ்வை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொன்ன பொய் அம்பலமாகியுள்ளது அவரின் பொறுப்பற்ற செயல்பாடுகள் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளன .

எடப்பாடி பழனிசாமி அசட்டையாக இருந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று எடப்பாடி பழனிசாமி கலவர நாடகத்தை நடத்தி,வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். உளவுத்துறை தகவல் தெரிவித்தும் சட்ட ஒழுங்கு நிலை கவனிக்கப்படாமல் இருந்தது. தீவிரமாக கவனித்திருந்தால் ஆரம்பத்திலேயே சமாளித்திருக்கலாம் என அறிக்கை கூறியுள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வுகள் நிமிட வாரியாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கையை எதிர்கொள்ள முடியாமல், அதிமுகவினர் பேரவையில் கலவர நாடகத்தை நடத்த முயன்றனர்.

யாராக இருந்தாலும் குற்றச்சாட்டுடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துவிட்டது.ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் நடவடிக்கைகள் மேற்கொள்வார் என்றார்.

மேலும் செய்திகள்