< Back
தேசிய செய்திகள்
வருகிற 7-ம் தேதி பாஜக கூட்டணியின் முதல்-மந்திரிகள் கூட்டம்
தேசிய செய்திகள்

வருகிற 7-ம் தேதி பாஜக கூட்டணியின் முதல்-மந்திரிகள் கூட்டம்

தினத்தந்தி
|
5 Jun 2024 1:45 PM IST

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.

மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. இதனால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் ஆலோசனை கூட்டம் வருகிற 7-ம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில், கூட்டணியில் உள்ள முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாநிலங்களில் பின்னடைவு, அதன் காரணம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்