< Back
தேசிய செய்திகள்
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
25 Jun 2022 8:51 PM IST

சிக்கமகளூருவில் 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் கூறி காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர்.

சிக்கமகளூரு;

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டம் நாடு முழுவதும் இளைஞர்கள் இடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து பல மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் தரப்பிலும் சில மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று சிக்கமகளூருவில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்த குடகு மாவட்ட காங். செய்தி தொடர்பாளர் புட்டசாமி கூறியதாவது:- 'அக்னிபத்' திட்டம் ஏழை-எளியோர் மற்றும் வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மத்திய அரசு துறையில் பணியாற்ற வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களை 4 ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் பணியில் அமர்த்தினால் அது சரியாக இருக்காது.

அவர்களின் எதிர்காலம் என்னவாகும்?. பா.ஜனதா தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் நேரத்தில் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்து இளைஞர்களை ஏமாற்றாமல் நிரந்தர அரசு பணிகளை வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்