< Back
தேசிய செய்திகள்
தமிழகத்திற்கு வரி பகிர்வாக ரூ.2,976 கோடியை விடுவித்தது மத்திய அரசு..!
தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு வரி பகிர்வாக ரூ.2,976 கோடியை விடுவித்தது மத்திய அரசு..!

தினத்தந்தி
|
22 Dec 2023 3:25 PM IST

மாநில அரசுகள் தங்கள் முதலீடுகள் மற்றும் செலவினங்களை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த வரிப் பகிர்ந்தளிப்பு வழங்கப்படுகிறது.

புதுடெல்லி,

டிசம்பர் மாதத்திற்கான வரி பகிர்வாக தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.72,961.21 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு ரூ.13,088.51 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கூடுதல் தவணையை முன்கூட்டியே மத்திய அரசு விடுவித்துள்ளது. நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வரிப் பகிர்வு தீர்மானிக்கப்படுகிறது. மாநில அரசுகள் தங்கள் முதலீடுகள் மற்றும் செலவினங்களை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த வரிப் பகிர்ந்தளிப்பு வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்