அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு, பணி நீட்டிப்பு வழங்க கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
|அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு, பணி நீட்டிப்பு வழங்க கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
விசாரணை அமைப்புகளில் ஒன்றான அமலாக்கத்துறையின் இயக்குனராக இருப்பவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. இவரது பதவிக்காலம் இந்த மாதம் 31-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு, பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரி மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அமலாக்கத்துறை இயக்குனரின் பணி நீட்டிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு 3-வது முறை பணி நீட்டிப்பு வழங்கியது சட்டத்துக்கு புறம்பானது, எனவே பணி நீட்டிப்பு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் அவர் ஜூலை (இம்மாதம்) இறுதிவரை பணியில் தொடர்வார் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.