< Back
தேசிய செய்திகள்
பள்ளிகளில் குழந்தைகளுக்கு முட்டை வழங்க மத்திய அரசு ரூ.40 கோடி ஒதுக்கியது; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி
தேசிய செய்திகள்

பள்ளிகளில் குழந்தைகளுக்கு முட்டை வழங்க மத்திய அரசு ரூ.40 கோடி ஒதுக்கியது; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

தினத்தந்தி
|
23 Aug 2022 2:48 AM IST

பள்ளிகளில் குழந்தைகளுக்கு முட்டை வழங்க மத்திய அரசு ரூ.40 கோடி ஒதுக்கியது என்று மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளது. இது புதிதாக வழங்கிய அனுமதி கிடையாது. காலம் காலமாக பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்தே இந்த நிலை உள்ளது. பள்ளிகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட பிரச்சினை இல்லை. ஆனால் தங்களை எப்போதும் மதசார்பற்றவர்கள் என்று கூறி கொள்பவர்கள் தான் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்.

பள்ளிகளில் ஆன்மிக விழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வக்பு வாரியம் கூறியுள்ளது. கோரிக்கை வைக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அதுகுறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இந்துக்கள் விரும்பினாலும் அய்யப்ப பூஜை மற்றும் யுகாதி விழா நடத்த அனுமதி கிடையாது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க மத்திய அரசு ரூ.40 கோடி நிதி வழங்கியுள்ளது. அந்த நிதியை கொண்டு குழந்தைகளுக்கு முட்டை வழங்குகிறோம்.

இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.

மேலும் செய்திகள்