< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி தலைமையில் மந்திரிசபை கூட்டம் தொடங்கியது
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் மந்திரிசபை கூட்டம் தொடங்கியது

தினத்தந்தி
|
3 March 2024 1:56 PM IST

விவசாயிகள் போராட்டம் குறித்து இன்றைய மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கூட்டம் தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள சாணக்யபுரி தூதரக வளாகத்தில் அமைந்துள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் மந்திரிசபை கூட்டம் நடைபெற்று வருகிறது .

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நடைபெறும் இந்த மந்திரிசபை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில், மக்களவை தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் என உள்துறை மந்திரி அமித்ஷா ஏற்கனவே கூறியிருந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் போராட்டம் குறித்து இன்றைய உயர்மட்ட மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்