< Back
தேசிய செய்திகள்
பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்த எருமை மாடு..! அரசுக்கு பதிலடி கொடுத்த ஊர் மக்கள்
தேசிய செய்திகள்

பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்த எருமை மாடு..! அரசுக்கு பதிலடி கொடுத்த ஊர் மக்கள்

தினத்தந்தி
|
21 July 2022 10:33 AM IST

கர்நாடகாவின் கதக் மாவட்டத்தில் எருமை மாடு ஒன்று பேருந்து நிலையத்தை திறந்துவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அமைத்துக்கொடுக்காத அரசின் மெத்தனப்போக்கை கண்டிக்கும் விதமாக அங்குள்ள மக்களே தென்னங்கீற்றில் பேருந்து நிலையம் அமைத்தனர்.

பின்னர், அந்த பேருந்து நிலையத்தை திறந்துவைப்பதற்காக எருமை மாட்டை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தனர். இதையடுத்து எருமை மாட்டை முன்னிலைப்படுத்தி கிராம மக்கள் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர்.

அரசின் மெத்தனப்போக்கை கண்டிக்கும் விதமாக கிராம மக்களே தென்னங்கீற்றில் பேருந்து நிலையம் அமைத்து, அதனை எருமை மாட்டைக்கொண்டு திறந்து வைத்த நிகழ்வு தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்