< Back
தேசிய செய்திகள்
கண்ணை மறைத்த கள்ளக்காதல் மோகம்: பெற்ற குழந்தைகளை கொன்ற கொடூர தாய்
தேசிய செய்திகள்

கண்ணை மறைத்த கள்ளக்காதல் மோகம்: பெற்ற குழந்தைகளை கொன்ற கொடூர தாய்

தினத்தந்தி
|
10 April 2024 10:31 AM IST

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 குழந்தைகளை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

ராய்காட்,

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஷீத்தல் போலே(வயது25). இவர் தனது கணவர் மற்றும் 5 வயது மகள், 3 வயது மகனுடன் வசித்து வந்தார். கடந்த மாதம் 31-ந்தேதி காலை ஷீத்தலின் கணவர் வெளியே சென்றிருந்தார். மாலை வீட்டிற்கு வந்தபோது, குழந்தைகளை எழுப்ப முயன்றார். அப்போது, குழந்தைகள் அயர்ந்து தூங்குவதாகவும் அவர்களை எழுப்பவேண்டாம் என ஷீத்தல் தெரிவித்தார்.

வெகுநேரமாக எந்தவித அசைவும் குழந்தைகளிடத்தில் இல்லாததை கண்ட ஷீத்தலின் கணவர் குழந்தைகளை மீட்டு அலிபாக் மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஷீத்தல் தான் தனது 2 குழந்தைகளையும் கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஷீத்தலை கைது செய்தனர். மேலும் இதற்கான காரணம் குறித்து போலீசார் ஷீத்தலிடம் விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் ஷீத்தலுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த நபருடன் ஷீத்தல் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்கு தனது குழந்தைகள் இடையூறாக இருப்பதாக உணர்ந்த ஷீத்தல் குழந்தைகளை கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஷீத்தலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்