< Back
தேசிய செய்திகள்
தங்கைக்கு நீதிகேட்டு டெல்லி புறப்பட்ட அண்ணன்... கவனம் ஈர்த்த ஒரு பாசப் போராட்டம்..!
தேசிய செய்திகள்

தங்கைக்கு நீதிகேட்டு டெல்லி புறப்பட்ட அண்ணன்... கவனம் ஈர்த்த ஒரு பாசப் போராட்டம்..!

தினத்தந்தி
|
26 May 2022 6:49 PM IST

ஆந்திராவில் திருமணம் செய்துவைத்த தங்கைக்கு நீதிகேட்டு அண்ணன் சுப்ரீம் கோர்ட்டிற்கு மாட்டு வண்டியில் புறப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமராவதி,

ஆந்திராவின் முப்பல்லூ கிராமத்தை சேர்ந்த நாகதுர்காராவ் என்பவர் தனது தங்கைக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார்.

திருமணத்தின் போது வரதட்சனையாக 23 லட்சம் ரூபாய் பணம், 320 கிராம் தங்கம், வெள்ளிப்பொருட்கள், 3 ஏக்கர் விவசாய நிலம் கொடுத்ததாக கூறியிருக்கிறார். ஆனால், தீய பழக்கவழக்கங்கள் கொண்ட மணமகனும், அவரது குடும்பமும் தனது தங்கையை துண்புறுத்தி வருவதாக நாகதுர்காராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்கையின் கணவருக்கு ஆளும் கட்சியின் ஆதரவும் இருப்பதால், நீதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டிலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் வழக்கு தொடர முடிவெடுத்து உள்ளார்.

இதற்காக தனது தங்கை மற்றும் தாயாருடன் நாகதுர்காராவ் மாட்டுவண்டியில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். திருமணம் செய்துவைத்த தங்கைக்கு நீதிகேட்டு அண்ணன் சுப்ரீம் கோர்ட்டிற்கு மாட்டு வண்டியில் புறப்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் செய்திகள்