< Back
மாநில செய்திகள்
குன்னூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டன
மாநில செய்திகள்

குன்னூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டன

தினத்தந்தி
|
2 Oct 2023 2:21 AM IST

குன்னூர் அருகே விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

குன்னூர்,

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை பஸ்சில் 61 பேர் சுற்றுலா வந்தனர். மாலை 5.30 மணியளவில் ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் பஸ் வந்து கொண்டு இருந்தது.மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் பஸ் திரும்பியபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

குன்னூர் பஸ் விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் பஸ்சுக்கு அடியில் சிக்கியிருந்த பாண்டித்தாய் என்பவர் சலடமாக மீட்கப்பட்டதை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டுசெல்லப்பட்டது. குன்னூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகளை முடிந்து 9 பேரின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலமாக கடையம் கொண்டுவரப்பட்டது.

சுமார் 12 மணி நேர பயணத்திகு பிறகு சாலை மார்க்கமாக உடல்கள் தென்காசி மாவட்டம் கடையம் வந்தடைந்தது. உயிரிழந்தவர்களில் உடல்களை பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை அந்தந்த பகுதிகளில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்