< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
எச்சரிக்கை விளக்கு ஒளிர்ந்ததால் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது
|4 Aug 2022 12:29 AM IST
எச்சரிக்கை விளக்கு ஒளிர்ந்ததால் ராணுவ ஹெலிகாப்டர் உ.பியில் அவசரமாக தரையிறங்கியது.
புதடெல்லி,
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் நேற்று வழக்கமான போர் ஒத்திகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது எச்சரிக்கை விளக்கு ஒளிர்ந்ததால் விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார்.
இதையடுத்து உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் விமானப்படைத் தளத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் விமானத்தில் என்ன கோளாறு என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.