திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 8-ந்தேதி தொடங்குகிறது
|திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வரும் 8-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
திருமலை,
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வரும் 8-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. 7-ந்தேதி மாலை விஸ்வக்சேனர் ஆராதனம், புண்யாஹவச்சனம், சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 8-ந்தேதி பவித்ர பிரதிஷ்டை, 9-ந்தேதி பவித்ர மாலைகள் சமர்ப்பணம், 10-ந்தேதி பூர்ணாஹுதி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. பவித்ரோற்சவத்தையொட்டி நாைள (செவ்வாய்க்கிழமை) கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. அதையொட்டி நாளை கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, அங்குரார்ப்பணத்தையொட்டி 7-ந்தேதி அஷ்டோத்திர சத கலசாபிஷேகம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுகிறது.
பவித்ரோற்சவத்தின் முதல் நாளான 8-ந்தேதி திருப்பாவாடை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, 9-ந்தேதி அபிேஷக சேவை, பிரேக் தரிசனம், லட்சுமி பூஜை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, 10-ந்தேதி சாம வேத புஷ்பாஞ்சலி, பிரேக் தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.