< Back
தேசிய செய்திகள்
கிராம கணக்காளருக்கு பணி இடமாறுதல் வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்; பெண் தாசில்தார் கைது
தேசிய செய்திகள்

கிராம கணக்காளருக்கு பணி இடமாறுதல் வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்; பெண் தாசில்தார் கைது

தினத்தந்தி
|
23 Jun 2023 3:09 AM IST

கிராம கணக்காளருக்கு பணி இடமாறுதல் வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார்.

மண்டியா:

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாசில்தாராக பணியாற்றி வந்தவர் சவுமியா. இவர் கடந்த 4 மாதங்களாக பாண்டவபுரா தாசில்தாராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவருக்கு கீழ் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து கணக்காளராக பணியாற்றி வரும் மரிசாமி என்பவர் தனக்கு பணி இடமாறுதல் கோரி விண்ணப்பித்து இருந்தார். அவரது பணி இடமாறுதல் விண்ணப்பம் தாசில்தார் சவுமியாவிடம் பரிசீலனைக்கு வந்தது. அப்போது மரிசாமியை அழைத்த தாசில்தார் சவுமியா, தனக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் தந்தால் பணி இடமாறுதல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். முதலில் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்ட மரிசாமி பின்னர் இதுபற்றி மாவட்ட லோக் அயுக்தா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அவர்கள் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.40 ஆயிரத்தை கொடுத்து அதை தாசில்தார் சவுமியாவிடம் கொடுக்குமாறு கூறினர். அதன்பேரில் மரிசாமி, தாசில்தார் சவுமியாவை சந்தித்து லஞ்சப்பணத்தை கொடுத்தார். அவரும் வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லோக் அயுக்தா போலீசார், தாசில்தார் சவுமியாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிந்து அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்