< Back
தேசிய செய்திகள்
உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி - டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி - டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி

தினத்தந்தி
|
4 Aug 2023 5:22 PM IST

எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை குஜராத் ஐகோர்ட்டு உறுதி செய்த நிலையில், ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி. எனது கடமை என்ன என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். உண்மை வெல்லும்; எனது பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன் என்று கூறினார்.

மேலும் செய்திகள்