தேசிய செய்திகள்
தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
25 May 2024 11:36 PM IST

நாடாளுமன்ற 6-வது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், ஆறாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. டெல்லி, அரியானா உள்பட 6 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்குப் பதிவின்போது மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

இந்நிலையில், தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்து இருப்பதாவது, "2024 பாராளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்டத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் எண்ணிக்கை சிறப்பாக உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு அருகில் வராததால் அதற்கு வாக்களிப்பது வீண் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்." என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்