< Back
தேசிய செய்திகள்
சண்டிகார் மேயர் தேர்தலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது - அரவிந்த் கெஜ்ரிவால்
தேசிய செய்திகள்

சண்டிகார் மேயர் தேர்தலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது - அரவிந்த் கெஜ்ரிவால்

தினத்தந்தி
|
20 Feb 2024 6:41 PM IST

பா.ஜ.க. மட்டுமின்றி மத்திய அரசின் செயல்பாட்டையும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சண்டிகார் மேயர் தேர்தல் நடந்த விதம் சர்ச்சையைக் கிளப்பி இருந்த நிலையில், இந்த தேர்தல் முடிவு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்தநிலையில், சண்டிகார் மேயர் தேர்தலில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய உத்தரவு பற்றி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

சில நேரம் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படும் உண்மைகளை நிச்சயம் தோற்கடிக்க முடியாது. இந்தியாவின் அரசியல் சாசனமும், ஜனநாயகமும் இன்றைய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டிற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த சிக்கலான சூழலில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மட்டுமின்றி மத்திய அரசின் செயல்பாட்டையும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அம்பலப்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்