< Back
தேசிய செய்திகள்
அருணாசல பிரதேசத்தில் பா.ஜனதா அமோக வெற்றி: மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
தேசிய செய்திகள்

அருணாசல பிரதேசத்தில் பா.ஜனதா அமோக வெற்றி: மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

தினத்தந்தி
|
2 Jun 2024 3:49 PM IST

அருணாசல பிரதேசத்தில் உள்ள 60 தொகுதிகளில் பா.ஜனதா 46 இடங்களில் வென்றுள்ள நிலையில், பிரதமர் மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் பத்து பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள 60 சட்டப்பேரவைகளில் 50 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பா.ஜனதா 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. என்பிபி கட்சி 05 இடங்களிலும் பிற கட்சிகள் 08 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை தாண்டி வெற்றி பெற்றதால் அருணாசல பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. அருணாசல பிரதேசத்தில் உள்ள 60 தொகுதிகளில் பா.ஜனதா 46 இடங்களில் வென்றுள்ள நிலையில், பிரதமர் மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- மாநிலத்தின் வளர்ச்சிக்கு தெளிவான முடிவை மக்கள் வழங்கியுள்ளார்கள். மக்கள் நலன் மற்றும் மாநில வளர்ச்சிக்காக பா.ஜனதா இன்னும் அதிக வீரியத்துடன் பாடுபடும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்