< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அந்த ஆப்பை டவுன்லோட் செய்யாதே என்று கண்டித்த தந்தை ...சிறுமி தற்கொலை
|24 Jun 2024 11:38 AM IST
சிறுமி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள டோம்பில்லி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஸ்னாப்சேட் ஆப்பை தனது மொபைல் போனில் டவுன்லோட் செய்துள்ளார். அந்த ஆப்பை டவுன்லோட் செய்யாதே என்று சிறுமியின் தந்தை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சிறுமி தற்கொலை செய்து கொண்டதை அவரது குடும்பத்தினர் நேற்று மறுநாள் பார்த்துள்ளனர்.
அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.