< Back
தேசிய செய்திகள்
5 மொழிகளில் தயாரான தாய்மண்ணே 2.0 பாடல் - ஜி.கே.வாசன், நிதின் கட்கரி வெளியிட்டனர்
தேசிய செய்திகள்

5 மொழிகளில் தயாரான 'தாய்மண்ணே 2.0' பாடல் - ஜி.கே.வாசன், நிதின் கட்கரி வெளியிட்டனர்

தினத்தந்தி
|
10 Aug 2023 4:34 AM IST

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ‘தாய்மண்ணே 2.0’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சுதந்திர போராட்ட வீரர்களைப் போற்றும் வகையில் பாடலாசிரியர் ரவி முருகைய்யா எழுதி நடித்துள்ள 'தாய்மண்ணே 2.0' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி பங்கேற்று பாடலை வெளியிட்டார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் பேசிய நிதின் கட்கரி, ராணுவ வீரர்களைப் போற்றும் வகையிலும், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் 'தாய்மண்ணே 2.0' பாடல் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்