< Back
தேசிய செய்திகள்
ஜம்மு-காஷ்மீரின் சோபியானில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரின் சோபியானில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு

தினத்தந்தி
|
26 Dec 2022 12:06 AM IST

ஜம்மு-காஷ்மீரின் சோபியானில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நல்வாய்ப்பாக பொதுமக்கள் காயமின்றி உயிர் தப்பினர்

சோபியான் (ஜம்மு&காமீர்),

ஜம்மு & காஷ்மீரின் சோபியானில் பொதுமக்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

சோபியானில் உள்ள ஹீர்போரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தகவல் கிடைத்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியானின் புரிஹாலன் ஹீர்போரா பகுதியில் பொதுமக்களின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், அவர் காயமின்றி தப்பியதால், பயங்கரவாதிகள் திட்டமிட்ட இலக்கை தவறவிட்டனர். தோட்டாக்கள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை தாக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்