< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் உயிரிழப்பு
|21 Dec 2023 7:30 PM IST
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் உடனடியாக பதிலடி கொடுத்தனர்.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
மேலும் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் உடனடியாக பதிலடி கொடுத்தனர். அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவத்தினர் வலுப்படுத்தி வருகின்றனர்.