< Back
தேசிய செய்திகள்
நர்சிங் மாணவியை உயிருடன் புதைத்து கொலை செய்த காதலன்
தேசிய செய்திகள்

நர்சிங் மாணவியை உயிருடன் புதைத்து கொலை செய்த காதலன்

தினத்தந்தி
|
7 July 2023 4:13 PM IST

கொலை குறித்த கொடூரமான விவரங்கள் உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணையில் வெளி வந்துள்ளது.

புதுடெல்லி

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இந்திய மாணவி ஜாஸ்மீன் கவுர்(21) நர்சிங் படித்து வந்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு தாரிக்ஜோத் சிங்கும், ஜாஸ்மீன் கவுரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜாஸ்மீன் கவுர் காதலனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் காதலன் தாரிக்ஜோத் பேசும் படி ஜாஸ்மீனை தொந்தரவு செய்து வந்துள்ளார் ஆனாலும், ஜாஸ்மீன் அவருடன் பேச மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தாரிக்ஜோத், ஜாஸ்மீனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, அடிலெய்டில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்த அவரை தனது நண்பரின் காரில் கடத்தி சுமார் 650 கி.மீ. தூரத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து பிளிண்டர்ஸ் மலைப்பகுதிக்கு அழைத்து சென்று அங்கு கழுத்தை அறுத்து கண்களை கட்டி அப்படியே கல்லறையில் உயிருடன் புதைத்துள்ளார்.

விசாரணையின் போது தாரிக்ஜோத் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தாலும், கொலை குறித்த கொடூரமான விவரங்கள் உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணையில் வெளி வந்துள்ளது. தாரிக்ஜோத் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்