< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லியில் அமித்ஷா தலைமையில் உள்நாட்டு பாதுகாப்பு மாநாடு
|25 Aug 2023 12:24 AM IST
டெல்லியில் அமித்ஷா தலைமையில் உள்நாட்டு பாதுகாப்பு மாநாடு நடக்கிறது.
புதுடெல்லி,
டெல்லியில் 6-வது தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு நடக்கிறது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் உயர் போலீஸ் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்று உள்ளனர்.
இந்த மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவரது தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் தேசிய பாதுகாப்புக்கு சவாலாக விளங்கும் பல்வேறு அம்சங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
முன்னதாக தேசிய பாதுகாப்பில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அமித்ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.