< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ; 6 தீயணைப்பு வீரர்கள் காயம்
|17 Aug 2023 5:58 PM IST
டெல்லி ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி,
புதுடெல்லி பவானா நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே 30 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த போராட்டத்தில் 6 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதேபோல் முன்னதாக லக்னோவில் நிகழ்ந்த தீ விபத்திலும் 3 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.