< Back
தேசிய செய்திகள்
நாளையுடன் முடிவடையும் பதவிக்காலம்: நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் ராம்நாத் கோவிந்த்
தேசிய செய்திகள்

நாளையுடன் முடிவடையும் பதவிக்காலம்: நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார் ராம்நாத் கோவிந்த்

தினத்தந்தி
|
23 July 2022 8:34 PM IST

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக கடந்த 2017-ஆம் ஆண்டு பதவியேற்ற ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.

புதுடெல்லி,

நாட்டின் 14-வது ஜனாதிபதியாக கடந்த 2017-ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரது பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது.

இதற்கிடையே புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. பா.ஜ.க. சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளார். புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வழிவிட்டு மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் நாளை வெளியேறுகிறார். இந்நிலையில், நாட்டு மக்களிடையே ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார்.

நாளை இரவு 7.00 மணிக்கு தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் உரையாற்றவுள்ள அவர், பதவிக்காலத்தில் தாம் வகித்த பொறுப்புகள், தான் கடந்து வந்த பாதை என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவரிப்பார் என தெரிகிறது.

மேலும் செய்திகள்