< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருப்பதி கோவிலில் தெப்போற்சவம் மார்ச் 3-ந்தேதி தொடக்கம்
|25 Feb 2023 5:49 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் 5 நாட்கள் தெப்போற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன.
தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபயநாச்சியார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் வழியாக வலம் வந்து, புஷ்கரணியில் மிதக்கும் தெப்பத்தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இந்தப் தெப்போற்சவத்தால் மார்ச் மாதம் 3 மற்றும் 4-ந்தேதிகளில் ஏழுமலையான் கோவிலில் சஹஸ்ர தீபலங்கார சேவை, மார்ச் மாதம் 5, 6 மற்றும் 7-ந்தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.