< Back
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக முடங்கிய இணையசேவை

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக முடங்கிய இணையசேவை

தினத்தந்தி
|
4 Oct 2022 2:06 PM IST

ஜம்மு காஷ்மீரில் பல பகுதிகளில் இணையசேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீர்,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

குறிப்பாக தேச விரோத சக்திகளால் இணைய சேவைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பொது அமைதி சீர்குலைந்துவிடும்" என்ற அச்சத்தின் கீழ் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி இரவு 7 மணி வரை ரஜோரி உள்ளிட்ட பல பகுதிகளில் இணையசேவை நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அப்பகுதிக்கு வருகை தந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்