< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; ஆந்திராவில் பரபரப்பு
|3 Aug 2023 9:14 AM IST
ஆந்திராவில் ஜெகன்மோகன் தொண்டர்கள், சந்திரபாபு நாயுடு தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
அமராவதி,
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கட்சி கொடியை ஏந்தியபடி பூங்கொத்து வாங்க காரில் வந்ததாகவும் அவர்களை தெலுங்கு தேச கட்சியினர் தடுத்து நிறுத்தி தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அனைவரையும் விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.