< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
எம்.பி அலுவலகத்தில் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு - தொடரும் நெருக்கடிகள்.. மீள்வாரா ராகுல் காந்தி?
|7 April 2023 5:13 PM IST
ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனதால் வயநாட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் தொலைபேசி மற்றும் இண்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வயநாடு,
ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனதால் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் தொலைபேசி மற்றும் இண்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும், இதற்கிடையில் இது போன்ற முடிவுகள் ஜனநாயகத்திற்கு சவால் விடுவதாகவும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வருகிற 11-ந்தேதி ராகுல்காந்தி கேரளா வரவுள்ளார். இதனிடையே, வயநாடு மக்களுக்காக அவர் எழுதிய கடிதத்தை தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அக்கட்சியினர் வழங்கி வருகின்றனர். அனைத்து நெருக்கடிகளையும் ஒற்றுமையாக சமாளித்து முன்னேற வேண்டும் என்று ராகுல் காந்தி அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.