< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானா டிஜிபி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
தேசிய செய்திகள்

தெலுங்கானா டிஜிபி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

தினத்தந்தி
|
12 Dec 2023 10:49 AM IST

காங்கிரஸ் கட்சி அங்கு தனி மெஜாரிட்டியை பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் 119 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 71 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து கடந்த 3-ம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இங்கு தனித்து ஆட்சியமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதன்படி காங்கிரஸ் கட்சி அங்கு தனி மெஜாரிட்டியை பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும்போதே தற்போது முதல்-மந்திரியாக உள்ள ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்ததன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக டிஜிபி அஞ்சனி குமாரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்தது.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து கொடுத்த விவகாரத்தில் தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரின் இடைநீக்கத்தை ரத்து செய்தது இந்திய தேர்தல் ஆணையம். அவர் மீண்டும் பணியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்